districts

img

வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடற்கரை சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துக மீனவர் சங்கம் பிரச்சாரம்

சென்னை, ஜூலை 23 -

      மீனவ மக்களின் வாழ் வாதாரம் பாதிக்காத வகை யில் சென்னை கடற்கரை மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள் ளது.

   சுற்றுலாவை மையப் படுத்தி எண்ணூர் முதல் கோவளம் வரையுள்ள கடற் கரை பகுதியில் ‘சென்னை  கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு பெறு தல் திட்டத்தை’ ரூ100 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள் ளது. இதற்கென கம்பெனி சட்டத்தின் கீழ் தனி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

   இதன்படி, திருவொற்றி யூர் பகுதியில் பூங்காக்கள் அமைப்பது, நொச்சிக்குப் பம் - பட்டினப்பாக்கம் இடையே தற்போதுள்ள சாலையை அகலப்படுத்தி சிமெண்ட் சாலை அமைப் பது, பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவது, சீனிவாசபுரம் முதல் ஆல்காட் ஊரூர் குப்பம், ஓடைமாநகர் வழி யாக கொட்டிவாக்கத்திற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்து வது, கொட்டிவாக்கத்திலி ருந்து கோவளம் வரை பூங்காக்கள் அமைப்பது, கலை கலாச்சார பொழுது போக்கு வசதிகளை ஏற்படுத் துவது, மர நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் அமைப்பது போன்ற பணி களை செய்ய உள்ளனர்.

     இந்த திட்டங்களால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் உள்ளது. எனவே, சென்னை கடற்கரை மறுசீரமைப்பு திட்டம் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். மீன்பிடி தொழிலையும், கடற்கரையையும் சார்ந் துள்ள பாரம்பரிய மீனவர்க ளின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வேண்டும். மீனவர்கள் வசிக்கும் அதே இடத்தில் குடியிருப்பு கள் கட்டித்தர வேண்டும், நொச்சிக்குப்பம் மீனவர் களுக்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடி யாக நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், டுமீங் குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை மிகவும் மோசமான நிலையில் உள்ள மீனவ  குடியிருப்புகளை இடித்து விட்டு அந்தந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் விரைந்து கட்டித்தர வேண்டும்,

    ஊரூர் ஆல்காட் குப்பம், ஓடைமாநகர் பகுதியில் சமூக நலக்கூடம் கட்ட வேண்டும், மீனவர் நலவாரியத்தில் 55 வயதில் பெண்களுக்கும், 60 வயதில் ஆண்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூலை 23) நொச்சிக்குப்பம் முதல் நீலா ங்கரை வரை பிரச்சாரம் நடை பெற்றது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.அன்புரோஸ் தலைமை தாங்கினார்.

    சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.லோகநாதன், தமிழ் நாடு மீன்பிடி தொழிலா ளர்கள் சங்கத்தின் செய லாளர் எஸ்.ஜெயசங்கரன், பொருளாளர் எஸ்.பரம சிவம், துணைத்தலைவர் எஸ்.பரமமூர்த்தி, திரு வள்ளூர் மாவட்டத் தலைவர் நித்தியானந்தம், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு நிர்வாகிகள் கே.வனஜ குமாரி, எஸ்.முகமதுரஃபி, சிபிஎம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் பேசினர்.