திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே உள்ள பொது வழி பாதைக்கு பட்டா வாங்கிவிட்டதாக தனிநபர் வேலி அமைத்து உள்ளதால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வட்டார செயலாளர் பி. சுந்தர் ஆரணி கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளார்.