districts

மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி அவசியம்

சென்னை, மார்ச் 31 தன்னம்பிக்கையை அதி கரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் அனை வருக்கும் உடற்பயிற்சி அவ சியம் என்று கல்ட் டாட் பிட் உடற் பயிற்சி கூட நிர்வாகி நரேஷ் கிருஷ்ணசாமி கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டை யில் புதிய மைய திறப்பு விழா வில் பேசிய அவர், வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த பயிற்சி யாளர்களால்  பல்வேறு விதமான உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படும் என்றார்.   யோகா, குத்துச்சண்டை, ஏரோபிக் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் சுவாவ நுட்பங்களையும் கற்றுத்தருவர். இந்த பயிற்சிகள் ஒருவருக்கும் தற்காப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் தன்னம்பிக்கை மற்றும் சமநிலையை மேம்படுத்த உதவும் என்றும் அவர்கூறினார். தடகள வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்  ஐஸ்வர்யா கிருஷ்ணன், திரைக்கலை ஞர்காயத்ரி ரெட்டி, உடற்தகுதி ஆர்வலர்களான அம்சத் கான், பெசன்ட் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.