சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு விருகம்பாக்கம் பகுதி 129வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், திமுக பகுதிச் செயலாளர் மு.ராஜா எம்.சி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், அசோகன், பகுதிக்குழு உறுப்பினர் கந்தன், கிளைச் செயலாளர்கள் ஆர்.முருகன், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.