புதுச்சேரி, ஜூலை.8-
பெரிய அங்காடியின் வியாபாரத்தை சீர்குலைப் பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுச்சேரி நகர மையத் தில் உள்ள குபேர் பெரிய அங்காடியின் கட்டுமான பணிகளை பகுதி, பகுதி வாரியாக துவங்க வேண் டும். அங்காடியை நம்பி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். ஸ்மார்ட் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குபேர் பஜார் கடை களின் கட்டுமான பணி களை விரைந்து முடித்து வியாபாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். நெல்லித்தோப்பு அங்காடி யின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நேருவீதி பெரிய அங்காடி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன்,மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற் குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,சீனுவாசன், மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன், நகரக்குழு உறுப்பினர்கள் மணவாளன், வடிவேலன், வீரமணிகண்டன், கெம் புராஜ், முத்துகிருஷ்ணன் உட்பட வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர்.