திருவள்ளூர், ஜூலை 2-
தலித் மக்கள் குடியிருந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அடுத்த மதுரவாசல் கிராமத்தில் வேணுகோபால் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 181 ல், 43 சென்ட் நிலத்தில் கடந்த மூன்று தலைமுறைகளாக 9 தலித் குடும்பத்தினர் வாழ்ந்து வரு கின்றனர்.
இவர்கள் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும் குடும்ப அட்டை, ஆதார் போன்ற ஆவ ணங்களை பெற்றுள்ளனர். 2011 ஆம் ஆண்டு வரை தரைவரியும் செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கோயில் நிலத்தில் குடியிருக்கும் 9 குடும்பங்களை மட்டும், கோயில் நிலத்திலிருந்து வெளியேற இந்து அறநிலையத்துறை வலியுறுத்தி வந்தது.இந்த சூழலில் அறநிலையத்துறை அதிகாரிகள் குழந்தைகளை, முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் வெளி யேற்றி விட்டு ஜூன் 28 அன்று வீடு களுக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த குடும்பத்தினர் பரிதவித்து வரு கின்றனர். உறங்க கூட இடமில்லை. வெட்டவெளியில் அமர்ந்து தான் சாப்பிடுகின்றனர். மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்து அறநிலையத்துறை அதி காரிகள் திடீரென, வீடுகளுக்கு வந்து சீல் வைத்ததால் அதிர்ச்சிய டைந்த அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஞாயிறன்று (ஜூன் 2), தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.வி.நக்கீரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.பத்மா, விதொச ஒன்றிய செயலாளர் பி.அருள் ஆகியோர் மதுரவாசல் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
இந்து அறநிலையத்துறை ஆணை யர் வைத்த சீலை உடனடியாக அகற்ற வேண்டும், குடியிருக்கும் கோயில் நிலத்தை மதிப்பீடு செய்து, நில உரிமையாளருக்கே கிரைம் செய்து தரவேண்டும், அந்த தொகையையும் சிறுசிறு தவணை யாக பெறவேண்டும் என குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நக்கீரன் வலியுறுத்தியுள்ளனர்.