districts

img

கோட்டூர்புரத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமையில் வியாழனன்று (ஏப். 11) வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் என். காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, எல்.சி. மணி, என். ரமேஷ், ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜி. குணசேகரன், தாலுகா குழு உறுப்பினர்கள் பி. சேகர், செந்தில்குமார், ராணிப்பேட்டை கட்சி கிளை உறுப்பினர்கள் மருத்துவர் பாபுஜி, ரவி, ஹரிதாஸ், அப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.