புதுச்சேரி,ஜூலை 13-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் எதிரொலியாக புதுச்சேரி பத்திர பதிவு துறை அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இயக்குநர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தை போலி ஆவ ணங்கள் மூலம் அபகரித்த பாஜக உறுப்பினர்கள் மற்றும் அதற்கு துணைபோகும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசா ரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடை பெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், “இப்பிரச்சனை குறித்து நீதி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று வலி யுறுத்தினர்.
ஆட்சியரிடம் மனு
இதனைத் தொடர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை அபகரித்து உள்ளவர்களையும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் நில அபகரிப்பு புகார் குறித்து மாநில அரசு குழு அமைத்து தனி விசா ரணை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வல்லவனை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் தலை வர்கள் மனு அளித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், கொளஞ்சியப்பன், பிரபுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், போலி பத்திரப் பதிவுக்கு உடந்தையாக இருந்து புதுச்சேரி பத்திரப் பதிவாளர், நில அளவைத்துறை இயக்குநருமான ரமேஷின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜியின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி சார்பு செயலர் ஜெயசங்கர் ஜூலை 12 அன்று வெளியிட்டார்.