districts

img

விருகம்பாக்கம் பகுதியில் சிபிஎம் வாக்குசேகரிப்பு

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப். 14) விருகம்பாக்கம் பகுதி 127 வது வட்ட கிளைகள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை கோயம்பேடு சிவன் கோயில்  அருகே கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர் வினோத், கிளைச் செயலாளர்கள் மோகன், செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.