செங்கல்பட்டு, டிச. 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீண்ட நாள் கோரிக்கையான சிங்கபெருமாள்கோயிலில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் கட்ட அமைச்சர் எ வ.வேலு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அருகில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருபெரும்பதூர் செல்லும் சாலையில் ரயில்வே இருப்பு பாதையை கடக்க கடந்த 2006-07 ம் ஆண்டில் பாலம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டு ரூ 52.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2011ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு திருப்பெரும்பதூர் பக்கமுள்ள பாலப்பகுதி மட்டும் கடந்த 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சென்னை, திருச்சி தேசிய நெடுஞ் ்சாலையில் பணிகளை தொடர தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திடமிருந்து தடையில்லாச் சான்று கிடைக்காததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சிபிஎம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இப்பால பணிகளை தொடர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கிடப்பில் கிடந்த ரயில்வே மேம்பால பணிகளை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மாமல்ல புரம், எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லைச் சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட் டுள்ளதால் இத்திட்டத்தின் சிங்க பெருமாள்கோயில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி இதற்கான அனுமதியை யும் இந்திய தேசிய நெடுஞ்சாலை வழங்கியுள்ளது. மேலும் இப்பணிக்கு தற்போது ரூபாய் 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று (டிச15) மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு அடிக்கல் நாட்டினார். பல்லடுக்கு மேம்பாலம் இதேபோன்று தாம்பரத்தி லிருந்து ஒரகடம் பகுதியை இணைக் ்கும் சாலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று படப்பையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு மாறாக ரூ 25.522 கோடியில் பல்லடுக்கு மேம்பாலம் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் 18 மாதங்களில் கட்டி முடிக்கும் பணி யினையும் அமைச்சர் வேலு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செங்கல் ்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.