districts

img

சுப்பிரமணி காவல் நிலைய கொலை வழக்கு

கடலூர், மே 21- சுப்பிரமணி காவல் நிலை யத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை யான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கடலூர் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்டாம்பாக்கம் காவல்  நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை யான சுப்ரமணி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கொலை பிரிவின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து மார்ச்.12 அன்று  உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து ரேவதி தரப்பில்  தில்லியில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மே.10 அன்று உச்ச  நீதிமன்ற நீதிபதிகள் ஹரி கேஷ் ராய், பிரசாந்த் குமார்  மிஸ்ரா அமர்வு  முன்பு  விசா ரணைக்கு வந்தது. அதில் பட்டாம்பாக்கம் சுப்பிர மணி மரணம் சித்திரவதை யால் நடந்ததா என்பதை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. குற்றமிழைத்த  காவலர்க ளான ஆய்வாளர் ராஜா,  உதவி ஆய்வாளர் செந்தில் வேலன், காவலர் செளமி யன் மீது பதியப்பட்ட  கொலை குற்ற பிரிவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்  முறையீடு மனுவை விசா ரணைக்கு கடலூர் விசா ரணை நீதிமன்றம் ஏற்று கொண்டது. மேலும் கொலை குற்றச்சாட்டு இல்லாமல் நடக்க இருந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.இந்நிலை யில் செவ்வாயன்று விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட ரேவதி தரப்பில், வழக்கறி ஞர்கள்  திருமூர்த்தி, ஜோதி லிங்கம், லெனின், மேரி, தமிழரசன், பிரதாப், மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜீவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட  செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள்  டி.ஆறு முகம், ஜெ.ராஜேஷ் கண்ணன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஜெய பாண்டியன் உள்ளிட்ட நீதி மன்றத்தில் ஆஜராகி உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை தாக்கல் செய்தனர். தீர்ப்பு நகலை பெற்று கொண்ட விசாரணை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பின் சாரம்சங்களை பதிவு செய்துகொண்டு வழக்கினை ஜுன் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;