மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
மக்களை மிரட்டும் தெரு நாய்கள் சென்னை,பிப்.26- சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தெரு நாய்க ளின் தொல்லை சமீ பகால மாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறைய வில்லை. குறிப்பாக ராய புரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப் பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொது மக்களை மிரட்டி வருகின்ற னர். கொடுங்கையூர், எழில் நகர், ஆர்ஆர் நகர், கிருஷ்ண மூர்த்தி நகர், புளியந் தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர் கார்டன், எஸ்.பி.ஐ. ஆபீசர் காலனி, பட்டாளம், சூளை, டி.கே.முதலி தெரு பகுதிகளில் நாய்களின் தொல்லை மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி
திருவள்ளூர், பிப் 26- மீஞ்சூர் அருகே விபத்துக்குள்ளானதில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உயிரிழப்பு, பலத்த காயங்களுடன் அவரது மனைவி நிர்மலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது திண்டுக்கல் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நிர்மலாவை காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பொன்னேரி அடுத்த திரு வேங்கடபுரத்தில் இரு வரும் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வரும் தங்களது மகளான ரவீனாவை கல்லூரியில் விட்டு விட்டு கணவன் மனைவி இருவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தபோது, சீமாவரம் சுங்கச்சாவடி அருகே மீஞ்சூர் - வண்ட லூர் இடையே செல்லும் வெளிவட்ட சாலையில் முன்னாள் சென்று கொண்டி ருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளனது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உயிரிழந்தார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
சென்னை, பிப். 26- சென்னை ராயபுரத்தில் சாலைத் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கொருக்குப்பேட்டை ஜீவா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் அபினேஷ் (24). இவர், பாரிமுனையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ராயபுரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். ராயபுரத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அங்கிருந்த சாலை தடுப்பு மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அபினேஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள்கள் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.கே. பக்கீரான் தாயார் காலமானார்
கடலூர், பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு உறுப்பினரும் சிறுபான்மை நலக்குழுவின் மாவட்ட தலைவருமான எஸ்.கே.பக்கீரான் தாயார் ரஜியாபீ திங்கட்கிழமை காலமானார். அன்னாரின் உடல் கூத்துப்பாக்கம் விஜயலட்சுமி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை கூத்தம்பாக்கம் ரஜ்மானியா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், என். எஸ்.அசோகன், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி. சுப்புராயன், ஜே. ராஜேஷ்கண்ணன், பி.தேன்மொழி, மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், திமுக மாநகர செயலாளர் கே. எஸ்.ராஜா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, மாநக ராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் வி.குளோப், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, குடியிருப்பு சங்கத்தின் தேவநாதன், பொது நல அமைப்புகளின் எஸ்.என்.கே.ரவி வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, சிறுபான்மை நலக்குழுவின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, செயலாளர் ராதிகா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் பி.ஜான்சிராணி தொலைபேசி மூலம் அஞ்சலி தெரிவித்தனர்.
ஆட்டோ சங்கம் உதயம்
காஞ்சிபுரம், பிப்.26 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் கூட்டு ரோட்டில் டாக்டர் ஏ.பி ஜெ அப்துல்கலாம் நினைவு ஆட்டோ ஓட்டு நர்கள் நலச் சங்கம் (சிஐடியு) பெயர்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி (பிப்.26) திங்களன்று கிளை தலைவர் இ.ஜெகதீசன் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் புதிய பெயர் பலகையை சிஐ டியு மாவட்டச் செய லாளர் இ.முத்துக்குமார், ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்க மாவட்டத் தலை வர் பி.ரமேஷ் திறந்து வைத்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கார்த்திக், க.அண்ணாதுரை, எஸ்.பூபாலன், இளவரசன் கே. சரவணன், எஸ்பாபு, வி.கண்ணன், டி.ஜெய் சங்கர், என்.தினேஷ்கு மார், வி.துரைவேல் ஆகி யோர் பங்கேற்றனர்.
புதுவையில் போதை ஸ்டாம்ப் விற்பனை: 3 பேர் கைது
புதுச்சேரி, பிப். 26- புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஸ்டாம்ப்’ வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் காவல் துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை ‘ஸ்டாம்ப்’ விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்து, அவரிடம் இருந்து 7 போதை ‘ஸ்டாம்ப்’-களை பறிமுதல் செய்தனர். மேலும் புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்ப் வாங்குவதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, சென்னையை சேர்ந்த அவரது நண்பர் பொறியியல் மாணவர் சந்தோஷ் (22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். காவல் துறையினர் சென்னைக்கு சென்று, அவரையும் பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்-களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்புகள் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்க ளுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: சிதம்பரத்தில் ஆலோசனை
சிதம்பரம், பிப். 26- சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சாராட்சியர் ராஷ்மிராணி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர்கள் ஹேமா ஆனந்தி, தனபதி, செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் செல்வலட்சுமி, வேலுமணி, சாந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இஸ்மாயில் (திமுக), சிபிஎம் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், தமிமுன் அன்சாரி (சிபிஐ), கருப்பு ராஜா (அதிமுக) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் பேசுகையில், “வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் பாலினம், வயது மாற்றி பதிவு செய்யப்படுகிறது” என்றார்.