நெல்கொள்முதல் நிலையங்களில் தனியார் கொள்முதல் செய்யும் திட்டத்தை கைவிட கோரியும் இதற்கு அனுமதி அளித்த மோடி அரசை கண்டித்தும் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என். நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் விவசாயிகள் சங்கத்தலைவர் கே.நேரு, என். சாரங்கன், கே. செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.