districts

img

தோழர் வி.ராஜேஸ்வரி காலமானார்

சென்னை, ஜூன் 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதி, 97வது வட்ட பெண்கள் கிளைச் செயலாளர் தோழர் வி.ராஜேஸ்வரி ஞாயிறன்று (ஜூன் 2) காலமானார். உடல் நலம் குன்றி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  அயனாவரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, எஸ்.கே. முருகேஷ், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.அன்பழகன், பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், சி.மார்ட்டின், விமலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னாரது உடல் திங்களன்று (ஜூன் 3) திருவேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.