districts

img

சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி

சென்னை,மே 16- தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி களில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழ கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம்தேதி தொடங்கியது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான நாளில்  இருந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர் வியாழனன்று காலை நிலவரப்படி 1.50 லட்சம்  பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  10 நாட்களாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றும், வீடுகளில் இருந்தும் விண்ணப்பித்து வருகின்றனர். புதன் மாலை வரை 91,877 பேர் பதிவு  கட்டணம் செலுத்தியுள்ளனர். 55,324 பேர்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ள னர். கணினி அறிவியல், பாடப்பிரிவுகளில் சேர ஆர்வமாக உள்ளனர். வேலை வாய்ப்புக்கு எளிதாக வழி வகுப்பதால் இந்த  பாடங்களை தேர்வு செய்கிறார்கள். அதே நேரத்தில் வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. பொறியியல்  பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை. பொறியியல் கல்லூரிகளில் காலத்திற் கேற்ப புதியபாடப்பிரிவுகளை தொடங்கு கிறார்கள். இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 20-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை விட  இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு மேல்  விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளில் பி.காம்,  பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ்,  பி.எஸ்.சி., கணினிஅறிவியல், பி.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. அரசு கலைக்கல்லூரிகளில் சேர  மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வணிகவி யல் பாடத்தில் சதம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பி.காம்,  பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகரித் துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்கவே விரும்புகின்றனர். சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பி.ஏ., எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். 22 சட்டக் கல்லூரிகளில் 2,043 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரையில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்) 5 ஆண்டு படிப்பு உள்ளது. இதில்  உள்ள 624 மொத்த இடங்களுக்கு இதுவரையில் 3,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

;