கிருஷ்ணகிரி, செப் 3- தேன்கனிக்கோட்டையிலிருந்து ஐய்யூர் வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது தனுசூர் எஸ்.குருபட்டி. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அரசு துவக்க பள்ளியும், சத்துணவு கூடமும் உள்ளது. ஆரம்பப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்துள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை வட்டாட்சிய ருக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பள்ளியின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பு சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.