சென்னை, ஜூலை 4-
கோயம்பேடு பகுதிகளில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதியபேருந்து நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது.
இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகிலேயே ஆம்னி பேருந்துநிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிளாம் பாக்கம் பேருந்துநிலைய பணிகள் 90 விழுக்காடுக்கு மேல் முடிந்து உள்ளன. பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப் பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த சாலை அமைத் தால் வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும்போது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன போக்கு வரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்ப தால் மாற்று சாலையை கருத்தில் கொண்டு அந்த சாலை பணி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. இதேபோல் மழைக்காலங்க ளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பேருந்து நிலைய பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை.
இதேபோல் நிலையத்தின் மேற்கூரை பணிகளும் பயணிகள் வந்து தங்குவதற் கான தங்குமிடம், உணவகம் மற்றும் கடைகள் பணியும் முடிவடையாததால் கிளாம்பாக்கம் பேருந்துநிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.