districts

img

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு வடசென்னை மாவட்டக் குழு சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனை அருகே சனிக்கிழமை (அக். 1) மாவட்ட துணைத் தலைவர் மா.பூபலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், சு.பால்சாமி, சி.சுந்தர்ராஜ், பி.என்.உண்ணி, ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;