districts

என்ஐஆர்எப் 2023 தரவரிசைப்பட்டியல் 9 பிரிவிலும் சிமாட்ஸ் பல்கலை கழகம்

சென்னை, ஜூன் 8

    நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பு எனும் என்ஐஆர்எப் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

   அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில்விண்ணப்பித்த ஒன்பது பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு இடத்தை  சவீதா மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப  அறிவியல் நிறுவனம் (சிமாட்ஸ்) இடம்பெற்றுள்ளது.

    பல் மருத்துவத்தைப் பொறுத்தவரை இப் பல்கலைக் கழகம் முதலிடமும் பிற பிரிவுகளில் பல்வேறு இடங்களையும் பிடித்துள்ளது. சட்டப்பிரிவைப் பொறுத்தவரை 11வது இடத்திலும், பல்கலைக் கழக வரிசையில் 13 இடத்தையும், மருத்துவப் பிரிவில் 18வது இடத்தையும், ஒட்டு மொத்த பிரிவில் 27வது இடத்தையும், ஆராய்ச்சி பிரிவில் 36வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 64வது இடத்தையும், நிர்வாகப் பிரிவில் 71வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்தற்காக மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு பல்கலை கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.