புதுச்சேரியில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு விருத்தாசலம் பாலக்கரையில் மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட துணை தலைவர் கே.அன்புச்செல்வி தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.சத்யா, வி.விமலா, கே.கவிதா, ஹேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.