districts

திருவள்ளூரில் இன்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்

திருவள்ளூர், செப் 3- அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டிய லுடன் இணைக்கும் பணி   மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்படி,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி களிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆதார் எண் விபரங்களை படிவம்-6டீல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.எனவே பொதுமக்கள் அனைவரும்; தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6டீ மூலம் இணைத்துக்கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்கள் படிவம்-6டீல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங் களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்என, மாவட்ட தேர்தல் அலு வலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  கேட்டுக் கொண்டுள்ளார்.