districts

சென்னை முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

காஞ்சிபுரம், மே.17 - காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட படப்பை அருகே புதிய வீடு கட்டுமான பணி யின் போது தவறி கீழே விழுந்த மின் விளக்கை எடுக்க முயன்ற கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். படப்பை அடுத்த ஒரத்தூர் அகத்தீஸ்வரன் கோவில் தெருவில் மணி என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் . அந்த வீட்டின் பூச்சு வேலைகள்  நடைபெற்று வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் தேவனூர் பகுதியை சேர்ந்த ஜோதி (வயது 44) என்பவர் ஒரத்தூர் பகுதி யில் தங்கியிருந்து மணி வீட்டின் கட்டுமான பணி களை செய்து வருகிறார். வீட்டின் பூச்சு வேலை களில்  ஈடுபட்டிருந்த ஜோதி, பலகையில் கட்டப் பட்டிருந்த மின்விளக்கு தவறி கீழே விழுந்தது. அந்த பல்பை எடுக்க ஜோதி முயற்சித்த போது மின்சாரம் பாய்ந்த்து. அதில் படுகாயம் அடைந்த ஜோதி மயங்கினார். அங்கே இருந்தவர்கள் ஜோதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழி யிலேயே  அவர் உயி ரிழந்தார்.  சம்பவம் அறிந்து ஒரத்தூர் - படப்பை சந்திப்பு அருகே வந்த மணி மங்கலம் காவல் துறை யினர் ஜோதியின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வீட்டின் உரிமையாளர் மணி என்பவரிடம் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். 

மனைவி வெட்டி படுகொலை: முதுநகரில் கணவன் வெறிச்செயல்

கடலூர்,மே.17- கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பத்தை சேர்ந்தவர் பழனி வேல் மகன் ரமேஷ் (வயது 37) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (வயது 35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் ரமேஷ் இந்துமதியின் தங்கை யான சூர்யா (வயது 33) என்பவரை யும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.  ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சூர்யா கடலூர் முது நகரில் வேறு ஒருவருடன் முறை தவறிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதை பலமுறை ரமேஷ் கண்டித்துள்ளார். கட லூர் முதுநகர் சோனகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஹஜ் வெள்ளிக் கிழமை அதிகாலை சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் கடுமை யான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டி யுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின்  காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கடலூர்,மே.17- கடலூர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செய லாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 க்கும்  மேற்பட்ட காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாக இருக்கும் பணி யிடங்களை நிரப்பும் வரை ஏற்கனவே இருக்கும் நீதிபதிகளை  பணியிட மாற்றம் செய்யக்கூடாது, பல ஆண்டுகளாக நிலு வையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு  சிமெண்ட் பெஞ்சுகளை அமைக்க வேண்டும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி நிறு வனங்கள் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் கூட குற்ற வாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை. சொத்துக்கள் பறி முதல் செய்யப்படவில்லை. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடை பெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப் பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு  பணத்தைக்  பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறுக சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

மெட்ரோ ரயில் சேவையை மணலி புதுநகர் வரை நீட்டிக்க கோரிக்கை

சென்னை, மே. 17- மணலி புதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கக் கோரி பத்தாயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று மனு அளிக்கப்பட்டது. மணலி புதுநகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஏராள மான குடியிருப்புகள் உள்ளன. சென்னை யின் பிற பகுதிகளில் வாரியத்தால் இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு இடங்கள் பெரும் வளர்ச்சி யடைந்தன. ஆனால் மணலி புதுநகர் வளர்ச்சி அடையவில்லை. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி மனை கள் விற்பனை ஆகாமல் உள்ளன. இந்நிலையில் தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கண்டெய்னர் முனையங்கள் உள்ளன. எண்ணூர் துறைமுகம் அமைந்துள்ளதால் பொன்னேரி நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சில நேரங்களில் பத்து கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 3 மணி நேரம் கூட ஆகும். இதனால் இந்த பகுதி மக்களுக்கு போக்கு வரத்து என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.  இதையடுத்து மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு என்ற அமைப்பை தொடங்கி, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தினர். இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ ரயில் சேவையை மணலி புதுநகர் வரை நீட்டிக்க வலியுறுத்தி மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த குழுவினர், எங்கள் பகுதியில் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எண்ணூர் மாத வரம் மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய இடத்தை மணலி புதுநகர் பெற வேண்டும். மணலி புது நகரில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்பு கள் உள்ளன. 1,500க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் தேவையான பேருந்து சேவை இல்லை. எனவே மெட்ரோ ரயில் சேவையை இணைப்பு சேவையாக வழங்குமாறு, 10 ஆயிரம் பேரிடம்  கையொப்பம் பெற்று அந்த மனுவை மெட்ரோ ரெயில் தலை மையகத்தில் அளித்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

ஆட்சியர் அலுவகத்தில் பழுதான மின் விளக்குகள்!
விழுப்புரம்,மே17-  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவல கம் அருகே பழுதாகி பல  மாதங்கள் ஆகியும் சரி  செய்யப்படாமல் இருக்கும்  மின்விளக்குகள் சரி செய்யப் படுமா பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், இந்த  வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவல கங்கள் உள்ளது. இங்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர், இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வந்து செல்வோர் மாலை நேரத்தில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகம் அருகில் மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாகியும், சம்பந்தப்பட்ட துறை கண்டு கொள்ள வில்லை, அதனால் போதிய வெளிச்சமின்றி மாவட்ட முதன்மை கல்வி   அலுவலகம் வந்து செல் வோர் அவதியடைந்து வருகின்றனர்.அதனால் உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவல கம் வாகனங்கள் நிறுத்தும்  நிழல் குடை  அருகே பழு தாகி உள்ள மின்விளக்கை சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

;