உடல் உறுப்புகளை விரைந்து கொண்டு செல்ல ட்ரோன்கள்! தானம்பெறப்படும் உடல் உறுப்புகளை விரைவாக அறுவை சிகிச்சை செய்யப்படும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்த ஒன்றிய, மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பிரபல இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும் எம்.ஜி.எம். மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவு தலைவருமான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 20 கி.மீ வரை ட்ரோன்களை பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விமான நிலையங்கள் இல்லாத வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடல் உறுப்புகளை விரைவாக சென்னைக்கு கொண்டு வர அதிக தூரம் பறக்கும் சக்தி வாய்ந்த ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகளிடம் உரிமம் கோர உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றார். தற்போது கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனை ரத்த மாதிரிகள் மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது.
சென்னை, செப்.3- தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களிலும் மூளைச்சாவு அடைந்தவர்க ளின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்காக சென்னை எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை கவுர விக்கும் நிகழ்ச்சியில் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ மனைகள் உட்பட 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உடல் உறுப்பு மீட்பு மையங்களாக செயல்படுவதற்கான அனுமதியை கோரின. கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும். உடல் உறுப்பு தானத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறினார். உடல் உறுப்புகளை எடுப்ப தற்கு மட்டும் உரிமம் வழங்கி னால் மட்டும்போதாது அந்த மருத்துவ மனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற் கான வசதிகளை செய்துதரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற் கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு வதாகவும் அவர் கூறினார். முன்னதாக காணொளி வாயிலாக மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு எம்ஜிஎம் ஹெல்த்கேர் இணைந்து மருத்துவ பயன்பாட்டிற்கு உருவாக்கிய ட்ரோன் சேவையை துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மற்றும் மோகன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுனில் ஷ்ராஃப் மற்றும் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.