சென்னை, ஜூலை 17-
அமைச்சர் க.பொன்முடி வீட்டில் நடை பெற்ற அமலாக்கத்துறை சோதனை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நட வடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி ஆகியோரது வீடு கள் மற்றும் அலுவலகங்களில் அம லாக்கத்துறையினர் திங்களன்று நடத்திய சோதனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் அவர் விடுதலையும் பெற்றி ருக்கிறார். அமலாக்கத் துறையினர் சோத னை நடத்தும் இந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஒற்றுமையைச் சீர்குலைக்க முடியாது!
திடீரென அமைச்சர் வீட்டில் சோத னை நடத்துவது வன்மையான கண்ட னத்திற்குரியது. அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது பழைய வழக்கு இருந்தால் அதை தூசி தட்டி அதன்மூலம் சோதனை நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் திட்டமிட்டுச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராகத்தான் அமையும்.
திசை திருப்பும் முயற்சி
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்துகொள்கிறார். இந்த சூழ்நிலையில், திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத் துறையின் மூலம் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
அமலாக்கத் துறை சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய தனித்துறை என்ற நிலை மாறி, பாஜகவின் கைப்பாவை யாக மாறியுள்ளது. பாஜகவின் துணை அமைப்பு போல் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் ஏமாற்று வேலை!
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த சோதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா?
தமிழ்நாட்டிலுள்ள பாஜக தலை வர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டும் புகாரும் உள்ளது.அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்து வதில்லையே ஏன்? நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஏன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிய வில்லை? சோதனையும் நடத்துவ தில்லை? ஊழலுக்கு எதிரான நட வடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை. அமலாக்கத்துறையை பயன் படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட சோதனை நடைபெறுகிறது.
மூழ்கும் கப்பல் பாஜக!
விலை வாசி உயர்வு, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசிய மான பொருட்களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட சோதனைகளை ஏவி விடுகின்றனர். வருகிற 2024 மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டு வதற்கு தயாராகிவிட்டனர். இதனால், பாஜக என்னும் கப்பல் முழுமையாக மூழ்கி விடும். அது ஒரு போதும் இந்த முறை கரை சேராது என்றார்.
பாஜக மிரட்டல் எடுபடாது!
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“ அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியா மல் அமலாக்கத்துறை மூலம் திமுகவை யும் அதன் கூட்டணி கட்சிகளையும் மிரட்ட லாம் என்று பாஜக நினைக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது” என்றார்.
யாருக்கு அச்சம்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனால்தான் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.