districts

img

இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று டிக்கெட் விற்பனை

சென்னை, செப். 8- இந்தியா- வங்காளதேசம் அணி களுக்கிடையேயான டெஸ்ட் போட்டி 19 ந் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதையொட்டி டிக்கெட் விற்பனை இன்று துவங்குகிறது. வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2  டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த  தொடர் வரும் 19ம் தேதி தொடங்கு கிறது. இந்த தொடரின் டெஸ்ட் ஆட்ட ங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், தில்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.இந்நிலையில் வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள  எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டி க்கான டிக்கெட் விற்பனை குறித்த அறி விப்பு வெளியாகி உள்ளது. இன்று டிக்கெட் விற்பனை அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக் கான டிக்கெட் விற்பனை ஆன்லைன்  மூலம் காலை 9.45 மணிக்கு தொடங்கி  நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது. https://insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. போட்டிக்குரிய அனைத்து நாட்களுக்கும் சேர்த்து ரூ.1,000, ரூ.1,250, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.