சென்னை, செப். 10- ஆரோக்கியமான பழக்கவழக்கங்களால் இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் சிவ.ஏ. மெய்யநாதன் தெரிவித் துள்ளார். இளைஞர்கள் மத்தியில் இதயம் சார்ந்த விழிப் புணர்வு செயல்திட்டத்தை கொண்டு செல்லும் வகை யில் பிரசாந்த் மருத்துவ மனை லயோலா கல்லூரியு டன் இணைந்து தொடங்கி யுள்ள இதயம் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் பேசுகை யில் : “உலகளவில் அதிக உயிரிழப்பிற்கு மிகப்பெரிய காரணியாக இருக்கின்ற இதயநோய் பிரச்சனை களை சமாளிப்பதற்கு இதய ஆரோக்கியத்தை மேம் படுத்துமாறு மக்களை ஊக்குவிப்பது அவசியம் என்றார். பிரசாந்த் மருத்துவ மனை இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா பேசு கையில், கடந்த சில ஆண்டு களாகவே இதய செயலி ழப்பு, மாரடைப்பு இளம் வயதினர் மத்தியில் அதி கரித்து வருகிறது என்றார். லயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை யின் செய்தி தொடர்பாளர் டாக்டர் நித்யா பேசுகையில், இம் வயதிலேயே இதய செயலிழப்புகளால் உயிரி ழப்புகள் நிகழாமல் தடுக்க இத்தகைய முன் முயற்சிகள் உதவும் என்று குறிப் பிட்டார்.