ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) புதிய கிளைத்திறப்பு விழா ஆவடி மோரையில் கே.ரவி தலைமையில் நடைபெற்றது. ஜெ,எபிநேசர் வரவேற்றார். பெயர் பலகையை சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் திறந்து வைத்து பேசினார். சங்க கொடியை 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான் ஏற்றி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், சங்க நிர்வாகிகள் எம்.சுப்பிரமணி, எம்.முருகன், ஆர்.பழனி, கே.ஜான்சன், கென்னடி, வி.முருகன், என்.சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தலைவராக எம்.சுப்பிரமணி, செயலாளராக முருகன், பொருளாளராக பழனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.