சென்னை, டிச. 13- கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து மக்கள் இயக்கங்களின் தேசிய தலைவர் மேதா பட்கர் சென்னையில் செய்தியாளட்களிடம் கூறியதாவது: இரண்டு பூதாகரமான தரமற்ற ரஷ்ய அணு உலைகளே எதிர்காலத்தை அழித்து விடும் என்று தமிழக மக்கள் 2011ஆம் ஆண்டில் இருந்து 2014 செம்டம்பர் மாதம் இறுதி வரை தொடர்ச்சியாக போராடியதை புறந்தள்ளி, இன்று கூடங்குளத்தில் 3, 4, 5, 6 என மென்மேலும் அணு உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அனைத்துமே 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப்பெரிய அணு உலைகள்.
முதல் 2 உலைகளுமே இன்று வரை திறம்பட இயங்கவில்லை, முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை. பல்வேறு குளறுபடிகளாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேலும் 7, 8 அணு உலைகளும், அணுக்கழிவு மையங்க ளும், அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் அமைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. நடப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள் கூடங்குளம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த 9ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவையில் பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங் சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித் ்திருக்கிறார். கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் அமைக்க ப்படும் அணுக்கழிவு மையங்கள் நிலநடு க்கங்களையும், சுனாமியையும்கூட எதிர்கொண்டு பாதுகாப்பாக இயங்க முடியும் என்றும், அணுக்கழிவு மையங் ்களால் அணுமின் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், சுற்றுச் ்சூழல் என யாருக்கும் எந்தவித கேடும் உருவாகாது என்றும் தெரிவித்தி ருக்கிறார்.
ஆனால் பூவுலகின் நண்பர்கள் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அணுக்கழிவு மையங்கள் (அணுஉலைக்கு அகலே) அமைப்பதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று 2018ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து, கூடுதல் கால அவகாசம் கோரியது. அந்தக் காலக்கெடு வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. ஒன்றிய அரசும், அதன் அணுசக்தித் துறையும் இப்படி முற்றிலுமாக திரித்து பேசுவது ஓர் அறமற்ற, ஆபத் ்தான மக்கள் விரோதச் செயல். மிக ஆபத்தான அணுக்கழிவுகளை நிரந்தர மாகப் புதைத்து நெடுங்காலம் பாதுகாக்கும் ‘ஆழ்நிலக் கருகூலம்’ நிர்மாணிப்பதைப் பொறுத்தவரை, இந்தியா ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ முறையை பின்பற்றுவதால், அணுக்கழிவு ஒரு “வளப் பொருள்” என்று அமைச்சர் கூறியிருக்கிறார். மறுசுழற்சிக்கு பிறகு குறைந்த அளவே உயர்நிலைக் கழிவுகள் இருக்குமென்றும், “அணுக்கழிவை தனிப்படுத்தல், பிரித்தல் மற்றும் எரித்தல் தொழில் நுட்பங்களை” இந்தியா உருவாக்கிக் கொண்டிருப்பதால், ஆழ்நிலை கருகூலத்திற்கான தேவை அண்மைக் ்காலத்தில் எழாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பல பத்தாண்டுகளாக கல்பாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டே யிருக்கும், இதுவரை தொடங்கப்ப டாமலே தத்தளிக்கும், நிரூபிக்க ப்படாத தொழில்நுட்பமான “அதிவேக ஈனுலைகளை” வெற்றிகரமாக இயக்கினால்தான், இந்தியா அணுஉலைக் கழிவுகளை ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ முறையில் கையாள்கிறது என்று கூற முடியும். அமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் தவறான, மக்களைத் திசை திருப்பும் தகவல். இந்தியா பெரு புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார். கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் 2 அணு உலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், முறைகேடுகள், ஆபத்துகள் பற்றி எல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்க ளுக்கு தெரிவிக்கும் வரை, விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும்.
ரஷ்யாவோடான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளம் அணு உலைகளில் எரிக்க ப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பவேண்டும். இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கே கட்டப் போகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலை வர்களையும் சந்தித்து ஆதரவு கோரி யுள்ளோம். கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநிலங்கள் கூட அங்கே அணுக்கழிவுகளை புதைக்க அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம் உள்ளூர் மக்களின் கருத்தை அறியாமல் எந்த திட்டத்தை யும்அமல்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்படி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாரோ, அதேபோல் கூடங்குளம் அணு உலை விரிவாக்க த்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது சுப.உதயகுமார் (அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்), கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), அருள்தாஸ் (மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு), எச்.ஜவா`ஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கிருஷ்ணமூர்த்தி (ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்) உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.