districts

img

குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 12-

    குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்கு உட் பட்டது முல்லை நகர். இங்கு  சுமார் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த குடி யிருப்புகளின் மையப்பகுதி யில் எல்பிஜி கேஸ் குடோன்  வைக்க பாலாஜி ஏஜென்சி என்ற நிறுவனம் கட்டுமானப் பணியை துவங்குவதற்காக புதன்கிழமை (ஜூலை 12) வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு குடியிருப்பு பகுதியில் கேஸ் குடோன் அமைக்கக் கூடாது எனக் கூறி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

     இதுகுறித்து முல்லை நகர் சங்கத்தின் தலைவர் சக்திவேல் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் மண்ட லத் தலைவர், வார்டு உதவி பொறியாளர் ஆகியோரிடம் குடோன் அமைக்கக்கூடாது என கடிதம் அளித்தோம். எங்கள் எதிர்ப்பை பற்றி  கவலைப்படாமல்  குடோன்  அமைக்க அனுமதித் துள்ளார்கள்.  மேலும் குடோனை குடியிருப்புகள் அல்லாத வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புதனன்று மனு அளித்தனர்.

   இதில் சங்கத்தின் செயலாளர் பழனிச்சாமி, நிர்வாகிகள் இசாக், ஜனார்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமன்ற  உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் ஒன்றுபட்டு  போராடுவோம் கேஸ்  குடோனை குடியிருப்பு களின் மையப்பகுதியில் அமைக்காமல் தடுப்போம் என உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.