districts

img

பள்ளத்தூரில் சாதிய வன்கொடுமை பொதுசாலையில் அம்மன் தேர் வரக்கூடாதாம்

கிருஷ்ணகிரிஜனவரி 21-  ஊத்தங்கரை வட்டம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூரில் தலித் மற்றும், மாற்று சமூகத்தினர் என தலா 100 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன.  ஊத்தங்கரையில் இருந்து 15  கிலோமீட்டர் தொலைவில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத  இந்த கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு தலித் மக்கள் அம்பேத்கர்  விளம்பர பேனரை சாலையில் வைத்துள்ளனர். அப்போது மாற்று சமூகத்தினர் அம்பேத்கர் பேனர் வைக்கக்கூடாது, எடுக்க வேண்டும் என தகராறு செய்துள்ளனர்.  17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு  மேல் தலித் மக்கள் அம்மன் தேரை தங்கள் தெருவில் இருந்து ஊரின் பொது சாலையில் பவனியாக இழுத்து வந்துள்ளனர். அப்போது மாற்று சமூகத்தினர் கூட்டமா்க சேர்ந்து “உங்கள் அம்மன்  தேரை  பொது சாலையில் இழுத்து  வரக்கூடாது” என தடுத்து வாக்குவாதத் தில் ஈடுபட்டு அதற்கு மேல் இழுத்துச் செல்ல விடாமல் தடுத்து சாலையின் குறுக்கே அமர்ந்தனர். அம்மன் தேர் பவனி செல்ல அனு மதிக்க வேண்டுமென வாக்குவாதத் தில் ஈடுபட்டு தலித் மக்களும் சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு கை கலப்பும் நடந்துள்ளது. இந்த தகவல் அறிந்து ஊத்தங் கரை  காவல்துறை துணை  கண்காணிப்பாளர் பார்த்திபன், சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சம்பத் , மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுக்களில் ஈடுபட்டனர்.  கடந்த சில ஆண்டுகளாக அம்பேத்கர் உருவத்துடன்கூடிய பேனரை பொதுசாலையில் வைக்க மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது, அம்மன் தேர் இழுத்துச் செல்லும் போது பொது வீதியில் தேரை இழுத்து செல்லவிடாமல் தடுப்பது என சாதிய வன்மத்துடன் நடந்துகொள்வதாக  காவல்துறை அதிகாரிகளிடம் தலித் மக்கள் தெரிவித்தனர். பதிலுக்கு  மாற்று சமூகத்தினர் தலித் இளை ஞர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் தலித் பகுதியில் 13 பேர் மீதும், மாற்று சமூகத்தினர் 14 பேர் மீதும்  வழக்கு பதிவு செய்தனர். மருத்துவ மனையில் இருந்த தலித் இளைஞர் சக்திவேலுவிடம் காவல்துறையினர் புகாரை திரும்ப  பெற வலியுறுத்தி  எழுதி வாங்கிக் கொண்டு, சுமூக பேச்சுவார்த்தைக்கு கூட்டிச் செல்வதாக  கூறி கைது செய்ததாகவும், அதன் பிறகு மாற்று சமூகத்தினர் இருவரை கைது செய்த தாகவும் தலித் மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் 19 ஆம் தேதியும் காவல்துறையினர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பி னரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். எப்போதும் பாதிக்கப்படும்  எங்களுக்கு எதிராகவும்  மாற்று  சமூகத்தினருக்கு ஆதரவாகவும்  காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக தலித் மக்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறையும் உடனடியாக தலை யிட்டு தலித் மக்களுக்கு நியாயம் கிடைத்திடவும் பல்வேறு விதமான சாதிய வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.