districts

img

நரிக்குறவர் பட்டாக்களில் திருத்தம் - விழுப்புரம் கோட்டாட்சியர் உறுதி

விழுப்புரம்,டிச.13- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அந்திலி கிராமத்தில் நரிக்குறவர் இன மக்கள் பல்லாண்டு கால மாக வசித்து வருகிறார்கள். இவர்களில் 28 நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 1979 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை. இதையடுத்து, சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டப் பொரு ளாளர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முருகன் ஏ.ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட 28 நபர்கள் விழுப்புரம் கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்த னர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், ஓராண்டாக கிடப்பில் உள்ள கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை வலியுறுத்தி புதனன்று (டிச.13) விழுப்புரம் கோட்டாட்சியரிடம் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வை யிட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக  அவர்  உறுதியளித்தார்.