கோயம்புத்தூர், ஜூலை 25-
சமூக சீர்திருத்த போராளி அய்யன்காளியின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா திங்களன்று கோவை கொடிசியா புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கப்படு வதை எதிர்த்த போராளி அய்யன்காளி. கேரள மண்ணில் வர்க்கப் போராட்டத்துடன் இணைந்த சமூக சீர்திருத்த வரலாற்றில் புத்தெழுச்சி நாயகனாக விளங்கியவர் அய்யன்காளி. இவரின் போராட்ட வரலாறு குறித்து, மலையாள மொழியில்பாபு பண்மனா “அய்யன் காளி – சாதிக்கெதிரான சல்லிக்கட்டு”என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலை பேராசிரியர்பி.ஆர்.ரமணி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பாரதி புத்தகாலயம் வெளிக்கொணர்ந்துள்ளது. தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நூலின் வெளியீட்டு விழா திங்களன்று கோவையில் கொடிசியாவில் நடை பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலய அரங்கில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளரும் வழக் கறிஞருமான மு.ஆனந்தன் தலைமை ஏற்றார். நூலினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம் வெளியிட தந்தை பெரியார் திரா விடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு உரை யாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, அய்யன்காளி – சாதிக் கெதிரான சல்லிக்கட்டு நூலின் ஆசிரியர் பாபு பண்மனா, மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் பி.ஆர்.ரமணி ஆகியோர் ஏற்புரையாற்றினர். முடிவில் பாரதி புத்த காலயத்தின் பதிப்பாளர் க. நாகராஜன் நன்றி கூறினார். நிகழ்வில் விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், தமுஎகச கோவை மாவட்டச் செயலாளர் அ.கரீம், எழுத்தாளர்கள் அமரந்தா, நான்சி கோமகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.