districts

img

எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான்

திருவள்ளூர்,ஆக.26-

     திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட  நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமையன்று  நடைபெற்றது.

    போட்டியை கூடுதல் ஆட்சியர்  சுக புத்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ெஜ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழி யாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்து வக் கல்லூரி முதல்வர் சரஸ்வதி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர்  கவுரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.