சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற கோரி வியாழனன்று (ஏப்.20) புரசைவாக்கத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்ட துணைச்செயலாளர் பி.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டத் தலைவர் ஜி.ஆனந்த், செயலாளர் எம்.ஆர்.மதியழகன், பொருளாளர் வி.கோபி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.