மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யாவின் மறைவையொட்டி அம்பத்தூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ஆர்.துரைசாமி (ஏஐடியுசி), பி.மாரியப்பன் (சிபிஐ), சு.லெனின் சுந்தர், சு.பால்சாமி (சிஐடியு), சி.சுந்தரராஜ், ஆர்.கோபி (சிபிஎம்), டி.கே.சம்பத்ராவ் (தையல் சங்கம்), சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), நாகராஜன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), மோகன்ராம் (திராவிட தமிழர் இயக்க பேரவை), ஆடானை சுகுமாரன் (உதவும் உள்ளங்கள்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.