districts

img

100 நாள் வேலை திட்டத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும்

 செங்கல்பட்டு, மே 14-  மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு வேலை முழு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம், அச்சரப் பாக்கம் வட்டாரங்களில் கடந்த ஆண்டு 100 நாள்  வேலைத்திட்டம் முழுமை யாக செயல்படுத்தப்பட வில்லை என தெரிய வருகி றது. இதில் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள் ளது. அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற மனு கொடுக் கும் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் தாட் சாயணி ஒன்றிய செயலாளர் ரங்கசாமி,அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் உடன் இருந் தனர். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் பன்னீர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத் தின் அகில இந்திய தலைவர்  நம்புராஜன், ஒன்றிய செயலாளர் லோகநாயகி, ஒன்றிய பொருளாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் மற்றும் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப் படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கள் கலைந்து சென்றனர்.

;