தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, மொத்தம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 714 பேராக உயர்ந்துள்ளது. மேலும், 61 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 323 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், திங்கள்கிழமை நிலவரப்படி 366 பேர் இன்னும் நோய்த்தொற்றுக்கான சிகிக்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏற்படாத நிலையில், அலட்சியமாக இருக்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடித்து, முற்றிலும் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.