அம்பத்தூர் அருகே ஐசிஎப் காலனியில் உள்ள அக்னி பாலராகா அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆம் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை (ஆக. 26) நடைபெற்றது. அதையொட்டி நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத்தின் செயலாளர் விஜயஸ்ரீ, பொருளாளர் மாதவி, முன்னாள் செயலாளர் சன்ப்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.