districts

img

200 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

அம்பத்தூர, ஜன.24- ஆவடி காவல் ஆணையரகப் பகுதி யில் நடைபெற்ற சோத னையில் 26கடைகளில் இருந்து 200 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.6.50 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகம் முழுவதும் தீவிர சோதனை நடத்த காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார்.  இதையடுத்து, புதன்கிழமை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஆவடி, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, செங்குன்றம்,  எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் 150க்கு மேற்பட்ட காவல் அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரி கள் இணைந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.  குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சந்தேகப்பட்ட 100க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, 26 கடைகளில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 26 கடைகளும் பூட்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சோதனையில் 200 கிலோ எடையுள்ள குட்கா, கூல் லிப்  உள்ளிட்ட போதைப்  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிகளை  மீறிய வியாபாரிகளுக்கு ரூ.6.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.