இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட கருணாநிதி நகர் கிளையின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் 18 பேர் சென்னை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, 7 பேர் முதல் பரிசும், 4 பேர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.