சேலம், நவ.3- பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வரு கிறது. இதனை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர். மாவட்ட தலை வர் பி. கந்தசாமி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வி. வெங்கடேஷ், பொருளாளர் வி.ஜெகநாதன், மாநில குழு உறுப்பினர் கற்பகம், வடக்கு மாநகர செயலாளர் குரு பிரசன்னா,மேற்கு மாநகர நிர்வாகி கண்ண தாசன், கிழக்கு மாநகர நிர்வாகி வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.