கோவை, மே 22 - உலக தேனீக்கள் தினத் தையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி வெள்ளியன்று நடைபெற் றது. உலகம் முழுவதும் மே 20 ஆம் தேதி உலக தேனீக்கள் தினமாக கொண்டாட பட்டு வருகிறது. இதனையொட்டி தேனீக்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டகலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு தேனீ வளர்ப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந் தார். இதுகுறித்து தோட்டக்கலை துறை அதி காரிகள் கூறுகையில், தேனீ வளர்ப்பு விவ சாய துறையிலும் பெரும் பங்கு வகிக்கி றது. இந்த தேனீகள் மகரந்தத்தையும், தேனையும் எடுத்து வருவதற்காக, மலர் களில் அமர்ந்து செல்லும் போது தன்னு டைய கால்களில் மகரந்த சேர்க்கையை நடத்துகிறது. அயல் மகரந்த சேர்க்கை நடை பெறுகின்ற காரணமாக அதிக அளவில் உற்பத்தி கிடைக்கிறது. தேனீ பெட்டிகளை வைத்து, விவசாயிகள் இந்த பணிகளை மேற்கொள்ளும் பொது கூடுதல் சலுகை கள் கிடைக்கின்றது. தேன் உற்பத்தியார் வருமானம் கிடைப்ப துடன், அவர்களின் விலை நிலங்களில் போட பட்டுள்ள பயிற்களின் விளைச்சல் அதிகரிக் கின்றது. ஆனைமலை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், காரமடை, போன்ற வாழை அதிக அளவில் விளையும் இடங்க ளானாலும் சரி, தென்னை விவசாயம் பயிரி டப்படும் இடங்களானாலும் சரி, காய்கறிகள் விளையும் இடங்களானாலும் சரி, அவர்க ளுக்கு தோட்டகலை துறை சார்பாக 40 சத வீகித மானியத்தில், அவர்களுக்கு தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இத்திட் டம் மற்றும் மானியம் குறித்த மேலும் விவரங் களுக்கு தோட்டக்கலை துறையை அணுக லாம் என தெரிவித்தனர்.