சூலூர், அக்.21- கோவை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வீட்டின் முன்பு அமர்ந்து பெண் உண் ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கோதபாளையத் தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வீட்டில் மேல் உயர் மின்னழுத்த கோபுர கம்பி வடம் செல்வதற்கு எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 14 நாட்கள் தனது வீட்டின் முன்பு உண்ணாவிரதத்தில் இருந்த கிருஷ்ணவேணியிடம், அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது கம்பி வடத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று காலையில் போலீஸ் பாது காப்புடன் கம்பி வடம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கி யது. இதையடுத்து விவசாய அமைப்பைச் சேர்ந்த சிலர் உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்த முற்பட்ட னர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தி னர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவி யது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மீண்டும் கிருஷ்ணவேணியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கம்பி வடம் அமைக்கும் தனது இடத்திற்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் கிருஷ்ணவேணி மீண்டும் உண்ணாவிரத போராட் டத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மாற்று இடத்தில் கோபுர கம்பி வடம் அமைப்பதாக உறுதியளித்த நிலை யில், தற்போது எந்தவித முன்னறிவிப்பு இன்றி மீண்டும் உயர் மின்னழுத்த கோபுரம் கம்பி வடத் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதனால் தற் போது மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி யுள்ளதாகவும் தெரிவித்தார்.