districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

ஈரோடு, ஜூலை 7- சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் காட்டை விட்டு  வெளியேறி வனப்பகுதியை ஒட்டி யுள்ள கிராமங்களுக்கு படையெ டுக்கின்றன. மேலும், விளைநிலங் களில் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன. இதனிடையே ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜோராஓசூர் கிராமத் தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34).  இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர்  தோட்டத்தில் வாழை சாகுபடி செய் திருந்தார். இந்நிலையில், செவ்வாயன்று இரவில் வனப்பகுதியிலிருந்து வெளி யேறிய 3 யானைகள் ரவிக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை களை சேதப்படுத்தின. மேலும்,  அங்கிருந்த தென்னை மரங்க ளையும் சேதப்படுத்தின. யானை களின் பிளிறல் சத்தம் கேட்டு தோட் டத்துக்கு வந்து பார்த்த ரவிக்குமார்,  யானைகள் பயிர்களை சேதப்ப டுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந் தார். இதன்பின் அக்கம் பக்கத்து விவ சாயிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த விவசாயி கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப் பந்தம் காட்டி யானைகளை விரட் டினர். 500 வாழைகளும், 20 தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த பயிர் களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர  வேண்டும். யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் வழி யில் ஆழமாக அகழி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தீவிரம்

கோவை, ஜூலை 7- கோவையில், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையி லான இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் தீவிரமடைந் துள்ளன. கோவை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை வழியாக பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள  மாநிலம், பாலக்காடுச் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளன. இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரண மாக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு  மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் துவங்கியது. முதல்கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216 கோடி  முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. இதில், உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள்  அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானாவும், கட்டு மான பணிகளும் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப் பாலம் 2ஆம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம்  ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சிச் சாலைக்கு செல்லும் வகையில் இறங்கு தளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு  மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.  இது குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகையில்,  இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி  மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த உடன்  ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்படும். பொள் ளாச்சி மற்றும் பாலக்காடுச் சாலையில் 2 இடங்களில் ஏறு  தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத் துடன் அமைக்கப்படுகிறது என்றார்.

அணை நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:22.63/60அடி நீர்வரத்து:கனஅடி வெளியேற்றம்: 28கனஅடி
மழையளவு:7மி.மீ
அமராவதி அணை நீர்மட்டம்: 48.72/90அடி.நீர்வரத்து:1402கனஅடி
வெளியேற்றம்:1601 கனஅடி.
மழையளவு:1மி.மீ

வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 7- பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு கணவன் தாக்கிய தால், கை உடைந்த நிலையில் இளம்பெண் பல்லடம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி, தொட்டிஅப்பிச்சி கோவில் அருகே  உள்ள ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என் பவரது மகள் ரூபிணி (24). இவரும், கரைப்புதூர் அண்ணா நக ரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) இருவரும் கல்லூரி படிக்கும் போது இருந்து ஆறு ஆண்டுகளாக காதலித்து  வந்தனர். இருவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என் பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. ரூபிணியின் அக்கா கணவர் பழனிவேல் என்பவர், ராஜா மற் றும் ரூபிணி இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார். சென்னை, பேரூரில் தனியார் உடற் பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்த தால், ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாட கைக்கு வீடு எடுத்து தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தோடு, கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை, ராஜா அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ரூபிணியின் கையை ராஜா உடைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து பல்லடம், கரைப் புதூர் அழைத்து வந்து, தனது தந்தை ராஜேந்திரனின் வீட்டில் வைத்து மீண்டும் ரூபினியை, ராஜா மற்றும் அவரது குடும் பத்தினர் இணைந்து தாக்கியதில் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வெளியே தப்பித்துள்ளார். மேலும், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு போலீசாரின் அவசர தொலை பேசி எண்ணிற்கு அழைத்து, ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளார். இதுகுறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி, கையை முறித்த ராஜா மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரூபிணியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

தாராபுரம், ஜூலை 7– விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு போக்கு வரத்து கழக பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த னர். திருப்பூர் மாவட்டம், செரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மனைவி காயத்திரி (25). இவர் கடந்த  2016 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியன்று தாராபுரம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் பழனி பாத யாத்திரைக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது திருப்பூரிலிருந்து மதுரை செல்ல தாரா புரம் நோக்கி வந்த அரசு பேருந்து வெங்கிட்டிபாளையம் அருகே காயத்திரி மீது மோதியது. இந்த விபத்தில் காயத் திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த காயத் திரியின் கணவர் காளிதாஸ் (44), மகன் முத்து சஞ்சய் ஆகி யோர் இழப்பீடு கோரி தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தாரா புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொ) பி.ஸ்ரீ குமார், விபத்தில் உயிரிழந்த காயத்திரிக்கு இழப்பீடு தொகை யாக ரூ.21 லட்சத்து 54 ஆயிரத்தை அரசு போக்குவரத்து கழ கத்து வழங்க கடந்தாண்டு மே 25 ஆம் தேதியன்று உத்தர விட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை உரிய காலத்தில் செலுத்தாததால், மனுதாரான காளிதாஸ் மீண்டும் தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிறை வேற்று மனு தாக்கல் செய்தார். தீர்ப்பின்படி தொகைக்கு வட்டி யுடன் சேர்த்து மனுதாரர் காளிதாசுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வழங்க தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் நீதிமன்ற உத்தரவை கண்டு  கொள்ளாததால், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு பேருந்தை ஜப்தி செய்ய தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோட்டி லிருந்து பழனி செல்வதற்காக தாராபுரம் புதிய பேருந்து நிலை யம் வந்த பேருந்தை நீதிமன்ற ஊழியர் அமீனா சுதாமணி ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டம்

நாமக்கல், ஜூலை 7- மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டத்தில் 30 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமலை தலைமையில் நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நபார்டு திட்டம் மூலம் தார்ச்சாலை அமைத் தல், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியில் காளிப்பட்டி கோவில் பின்புறம் எல்இடி உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப் பினர் நிதியில் ஆசிரியர் காலனி பகுதியில் சிமெண்ட் சாலை  அமைத்தல், பெரியஉப்புபாளையம் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல், கோணங்கிபாளையம் பகுதியில் தெருவிளக்கு  அமைத்தல், பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 30 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

“6 மாதங்களில் 4 ஆயிரம் ரேசன் அட்டைகள்”

ஈரோடு, ஜூலை 7- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 4 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் (ரேசன் கார்டுகள்) விநியோகம் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 1,159 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 8 லட்சம்  குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. புதிதாக ரேசன் அட்டை பெற தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆரம் பத்தில் புதிய ரேசன் கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஸ்மார்ட் கார்டு அச்சிடப் பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதனால் புதிய கார்டு பெறுவ தற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது  அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதி பெற்று, கார்டு  பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள தால் விண்ணப்பித்த சில நாட்களிலேயே விண்ணப்பதாரர்க ளுக்கு கார்டு வழங்கப்பட்டு விடுவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் கூறுகையில், தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவல கம் மற்றும் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் புதிய ரேசன் அட்டைக்கான விண்ணப்பம் உடனடியாக விசாரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு உரிய பரிந்துரையுடன் ஆட்சியரிடம் அனுமதி பெற்று, 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட் கார்டு  பிரிண்ட் செய்து வழங்கப்படுகிறது. தற்போது அந்தந்த மாவட் டங்களிலேயே பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளதால், எளிதாக புதிய ரேசன் அட்டை பெற முடி கின்றது. கடந்த மே மாதம் 703 அட்டைகளும், ஜூன் மாதம் 700 அட்டைகளும் வழங்கி உள்ளோம். கடந்த 6 மாதங்களில் மட்டும் புதியதாக 4 ஆயிரம் ரேசன் அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. உரிய காரணம் இருந்தால் மட்டுமே விண்ணப் பங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றது, என்றார்.

பருத்தி ஏலம்

ஈரோடு, ஜூலை 7- ஈரோடு மாவட்டம், பூதப் பாடி ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகு திகளிலிருந்து வந்த ஏராள மான விவசாயிகள் 6 ஆயி ரத்து 828 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தி ருந்தனர். ஒழுங்குமுறை விற் பனைக்கூட கண்காணிப்பா ளர் சந்திரசேகரன் முன்னி லையில் நடந்த ஏலத்தில், பிடி  ரகப்பருத்தி ரூ.5 ஆயிரத்து 689 முதல் ரூ.7 ஆயிரத்து 19 வரை ஏலம் போனது. மொத் தம் ரூ.1 கோடியே 52 லட் சத்து 58 ஆயிரத்து 31க்கு வர்த்தகம் நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்த னர்.
 

;