districts

மண் அரிப்பை தடுக்க தேயிலை தோட்டங்களில் நீர்க்குழிகள்

உதகை, ஜூலை 6- மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்க தேயிலை தோட்டங்களில் நீர்க்குழி கள் அமைக்க வேண்டும் என்று விவசாயி களுக்கு, தோட்டக்கலைத்துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக குன்னூர் வட்டார தோட் டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், மிக கனமழை பெய்யும் என்று  வானிலை மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. இதனால் பருவமழை காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்து கொள்ள தோட்டக்கலைத்துறையின் மூலம் தெரிவிக்கும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண் டும். இதன்படி மழைக்காலங்களில் காய்கறி தோட்டங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதியும், பார் அமைக்கும் போது  குறுக்குவாட்டில் இல்லாமல் நீளவாக்கில் பார் எடுக்க வேண்டும். தேயிலை தோட்டங் களில் மழைநீரை சேமிக்கவும், மண் அரிப்பை  தவிர்க்கவும் நீர்க்குழிகள் எடுக்க வேண்டும். அதிகமான சரிவுள்ள பகுதிகளில் காய் கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், சரிவுக்கு  குறுக்கே ஆங்காங்கே கம்பு நேப்பியர் புல், வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை புல் நடவு  செய்து இயற்கையான வரப்புகள் ஏற் படுத்தி வரப்புகளில் பழப்பயிர் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம். அதிக  சரிவுள்ள பகுதிகளில் கற்களால் ஆன சம  உயர வரப்புகள் அமைத்து மண் அரிமா னத்தை தவிர்க்க வேண்டும். மழை காலங் களில் போதிய பயிர் இடைவெளியினை பராமரித்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். நீரோடைக்கு அருகில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டத்தை ஒட்டி யுள்ள நீர் ஓடையில் தண்ணீர் தேங்காத வாறு பார்த்து கொள்ள வேண்டும். கால்நடை களுக்கான கொட்டகைகள் சுகாதாரமாக பராமரிப்பதுடன் மழை நாட்களில் கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். காற்றின் ஈரப்பதம், வெப்பநிலையின் ஏற்ற தாழ்வுகளால் நோய் பாதிப்பு ஏற்படாத  வண்ணம் தற்காப்பு நடவடிக்கையாக மண்ணில் டிரைகோடெர்மா விரிடி, சூடோ மோனஸ், பேசில்லாஸ் போன்றவற்றினை ஏக்டேருக்கு 4 கிலோ என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டு பயிர் களை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மழை காலங்களில் பயிர் களையும், கால்நடைகளையும் பாதுகாத்து  மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

;