சேலம், அக்.16 - சேலத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் நீர் சிக்க னத்தை வலியுறுத்தி ஓவியப்போட்டி நடைபெற்றது. சாரதா அறக்கட்டளையின் சார்பில் நீர் சிக்கனத்தை வலியு றுத்தும் விதமாக சிக்னேச்சர் ஓவியப்போட்டி சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர், சிறுமி கள் முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற் பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி தாமோதரன் பரிசுகள் வழங்கினார். மேலும் போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சாரதா அறக்கட்ட ளையின் நிர்வாக இயக்குனர் லலிதா கோவிந்தராஜ் செய் திருந்தார். இதில், சாலர் பிலிம்ஸ் புரொடக்சன் நிர்வாக இயக்குனர் சங்கர், நிலா, மேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.