districts

img

நகரமயம் ஆகியும் தீராத பிரச்சனைகள்!

திருப்பூர் வடக்கு ஒன்றிய கிரா மங்களில் கடந்த காலங்களில் விவ சாயத்திற்கு நீர் ஆதாரமான அவி னாசி - அத்திக்கடவு திட்டத்தின் பணி கிடப்பில் கிடந்தபோது மார்க் சிஸ்ட் கட்சி அணிகள் பலதரப்பட்ட  போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. தற்போது  இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு  காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து குழாய் மூலம் குட்டை களில் தண்ணீர் நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இத் திட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதி  பொங்குபாளையம் உள்பட விடு பட்டுப் போன அனைத்து குட்டைக ளையும் சேர்க்க வேண்டும் என  கட்சி சார்பில் தொடர்ந்து குரல்  கொடுத்து வருகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படு மானால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வடக்குப் பகுதியில் தொ டர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும்.

அடிப்படை பிரச்சனைகளில் தலையீட்டு

அதேபோல் வடக்குப் பகுதி யில் உள்ள 10 ஊராட்சி பகுதிகள் குடியிருப்புகளாக மிக வேகமாக மாறி வருகிறது. மாறிவரும் வேகத்துக்கு ஏற்ப ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாமல், புதிய  திட்டமிடல் இல்லாமல் அனைத் துப் பகுதிகளிலும் மக்களின் அடிப் படை வசதிகள் இல்லாமல் மிக  மோசமான நிலை உள்ளது. அதே போல், மாநகர பகுதியான 13 வார் டுகள் முன்பு செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெரிப்பெரிச் சல், தொட்டிய மண்ணரை ஊராட் சிகளாக இருந்து, திருப்பூர் மாநக ராட்சியானபோது இணைக்கப்பட் டது. ஆனால் இணைக்கப்பட்ட பகு திகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதிக ளும் முழுமையாக செய்யப்படா மல் உள்ளது. குறிப்பாக சுகாதார வசதி லட்சக்கணக்கான மக்கள்  வசிக்கும் இந்தப் பகுதியில் சாக்கடை அள்ளுவதற்கும், குப் பைகளை அகற்றுவதற்கும்கூட போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. டெங்கு உள்பட பல் வேறு நோய் தொற்று உருவாகும் பகுதியாக உள்ளது. சாலை வச திகள் மிக, மிக மோசமாகவே உள்ளது. பூண்டி ரிங் ரோடு முதல்  கூலிபாளையம் வரை 15 கிலோ மீட்டர் திருப்பூர் நகரின் சுற்று வட்டப் பாதையான இந்த சாலை யில் சாக்கடை நீர் வெளியேற வழி யில்லாமல், பல இடங்கள் சேறும்,  சகதியுமாக உள்ளது.'

குமார் நகர் முதல் பூண்டி ரிங்  ரோடு வரை பாதாள சாக்கடை வேலைகளால் எந்த ஒரு வாகன மும் வந்து செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளை சரி செய்ய மார்க்சிஸ்ட் கட்சி பல  கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. பல  கனரக வாகனங்கள் வந்து செல் லும் இந்த சாலைகளை மாநில நெடுஞ்சாலை துறையும், மாநக ராட்சி நிர்வாகமும் இணைந்து உட னடியாக சரி செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. மழை காலங்களில் அவினாசி ரோடு, காந்தி நகர் முதல் பிஎன் ரோடு பிச்சம்பாளையம் புதூர் நல் லாறு வரை மழை நீரும், சாக்கடை  நீரும் வீடுகளுக்குள் போகும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. மழை காலங்களில் தெற்குப் பகுதி களில் இருந்து வடக்குப் பகுதிக் கும், வடக்குப் பகுதியில் இருந்து  தெற்குப் பகுதிக்கும் மக்கள் வந்து  செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் ராஜ வாய்க்கால் அமைக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டுகிறது. போயம் பாளையம் பிரிவு முதல் கூலி பாளையம் வரை, சக்திநகர் முதல்  வெங்கமேடு வரை, செட்டிபாளை யம் முதல் கூத்தம்பாளையம் வரை  உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் எனவும் கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  மேலும் முதலாவது, இரண்டா வது, மூன்றாவது குடிநீர் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் தற் போது நான்காவது குடிநீர் திட்டப்  பணிகள் நடைபெற்றாலும் மக்க ளுக்கு தேவையான குடிநீர் கிடைப் பதில்லை. தற்போது பாதாள சாக் கடை திட்டப் பணிகள் நடைபெறு வதால் ஆங்காங்கே பைப் லைன்  உடைக்கப்பட்டு வீட்டு இணைப்பு களுக்கு தண்ணீர் வருவது 15 நாட்க ளுக்கு மேல் ஆகிவிடுகிறது. சில  இடங்களில் அதற்கு மேலும் ஆகி றது. தொடர்ந்து பல்வேறு போராட் டங்களை நடத்தி பல இடங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து குவியலாக மக்கள் வசிக்கும் இப் பகுதிகளில் முறையான திட்ட மிட்டு பணிகளை செய்ய வேண் டும்.

கொரோனா நிவாரண பணிகள்

கோரிக்கைக்காக போராட்டங் கள் நடத்துவதோடு மட்டுமில்லா மல் வடக்குப் பகுதியில் கெரானா பெரும்தொற்று ஏற்பட்டபோது கட்சி அணிகள் கபசுர குடிநீர் வழங் கல், குறைந்த விலையில் காய்கறி விற்பனை, வெளி மாநில தொழிலா ளர் குடும்பங்களுக்கு உணவுப்  பொருட்கள் வழங்கியது, கொரானா பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு உணவு வழங்கியது.  மருத்துவமனையில் சேர்ப்ப தற்கு உதவியது, இரண்டு அலையிலும் நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் தொடர்ந்து 40  நாட்களுக்கு மேல் 15 ஆயிரம்  குடும்பங்களுக்கு இப்பணி செய் யப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் :-

மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றிய மாநாட்டு தீர்மானத்தின் படி வடக்குப் பகுதியில் புதிய மருத் துவமனை அமைக்க வேண்டும், அவினாசி அத்திக்கடவு திட்டத் தில் விடுபட்ட பகுதிகளை இணைப்பதுடன், ஊத்துக்குளி தாலுகாவில் உள்ள நஞ்சராயன் குளத்தையும் திட்டத்தில் இணைத்து பறவைகள் சரணால யமாக மாற்ற வேண்டும், வடக்குப் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும், வீட்டு இணைப்புகளுக்கு மூன்று நாட் களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டடப் பணியை உடனடி யாக தொடங்க வேண்டும் என  மத்திய, மாநில அரசுகளையும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்க ளையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இப்பணிகளை நிறைவேற்றா மல் காலம் கடத்தினால் மக்களை  திரட்டி பல்வேறு போராட்டங் களை நடத்தவும் கட்சி தீர்மானித் துள்ளது. மக்களின் நலன் சார்ந்த  போராட்டங்களை நடத்தும்போது இப்பகுதி மக்களும் அதற்கு ஆத ரவு கொடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுக்கிறது.
 

;