திருப்பூர் ஜன. 18- பொங்கல் பண்டிகையையொட்டி விடப் பட்ட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிந் துள்ள நிலையில், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணி புரியும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்ப வரத் தொடங்கியுள்ளனர். இருத்தும் வரும் திங்கள் முதல் தான் நகரம் இயல்பு நிலைக்குத் திரும் பும் எனத் தொழில் நிறுவனங்களின் உரிமை யாளர்கள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 முதல் 17 வரை அரசு விடுமுறை விடப் பட்டிருந்தது. இதையொட்டி திருப்பூரில் தங்கி பணி புரியும் வெளி மாவட்ட தொழிலா ளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட னர். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்க ளில் வெளி மாவட்ட தொழிலாளர்களே பெரும் அளவில் பணி புரிகின்றனர். மேலும், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட வற்றையும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வர்களே அதிக அளவில் வைத்துள்ளனர். இத னால், கடந்த 4 நாட்களாக திருப்பூரின் கடை கள், தொழில் நிறுவனங்கள் மூடி இருந்தது. மேலும், முக்கிய வீதிகள் ஆள் நடமாட்டம் இல் லாமல் காணப்பட்டது, சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் வெறுச்சோடி இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் விடு முறை முடிந்துள்ள நிலையில், வெளி மாவட் டத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் திருப்பூ ருக்கு வர தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, பனியன் நிறுவன உரிமை யாளர் ஒருவர் கூறுகையில், ஆண்டு முழுவ தும் திருப்பூரில் தங்கி பணி புரியும் தொழிலா ளர்கள் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை காலத்தில் தான் சொந்த ஊர்களுக்கு செல் வார்கள். குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தான் 4 நாட்களுக்கு கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால், குடும்பத்தார் மற் றும் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்வது வழக்கம். அதனால், கடந்த நான்கு நாட்களாக, திருப்பூர் சுற்று வட்டார பகுகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங் கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை. நேற்றுடன் தொடர் விடு முறை முடிந்துள்ள நிலையில், இருந்தும் பெரும் பாலான கடைகள் மூடியே காணப்ப டுகின்றது. இந்த வாரத்தில் இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் தொழிலாளர்கள் பலர் ஞாயிற்றுக்கிழமை தான் திருப்பூருக்கு திரும் புவார்கள். அதனால் பல பனியன் நிறுவனங் கள் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறி வித்துள்ளனர். மீண்டும் திங்கட்கிழமை முதல் தான் தொழிற்சாலைகள் திறக்கும் என்ப தால் நகரம் இயல்பு நிலைக்கு திரும்ப இன் னும் ஓர்யீரு நாட்கள் ஆகும் என தெரிவித் தார்.