பொள்ளாச்சி, டிச.21- பொள்ளாச்சியை அடுத்த கொண் டேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த கொண்டேகவுண்டன் பாளையம் ஊராட்சியானது வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. இதன் கிளை ஊராட்சியாக கருமா புரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந் நிலையில், கொண்டேகவுண்டன்பா ளையம் மற்றும் கருமாபுரத்திலும் கிராம ஊராட்சியில் கடந்த இரண்டு மாதகாலமாக ஊரக வேலை வாய்ப் புத் திட்டத்தில் விவசாய தொழிலாளர் களுக்கு வேலைகள் வழங்கப்பட வில்லை. இதையடுத்து, திங்களன்று அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சி யரிடமும், சங்கத்தின் மாவட்ட செயலா ளர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் தலைமையில் விவ சாய தொழிலாளர்கள் மனு அளித்த னர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், நூறுநாள் வேலை உறுதியாக அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.