districts

img

சுடுகாடு பாதை இல்லாததால் ஆற்றை கடந்து சென்று உடலை அடக்கம் செய்யும் அவலம்

தருமபுரி.டிச.5 நல்லம்பள்ளி அருகே சோளிய னூர் கிராமத்தில் உள்ள அருந்ததி இன மக்களுக்கு சுடுகாடு பாதை இல்லாததால் ஆற்று தண்ணரை கடந்து சென்று உடலை அடக்கம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டம்,நல்லம் பள்ளி வட்டம்,தொப்பூர் அருகே கம்மம்பட்டி பஞ்சாயத்து சோளியா னூர் கிரமாத்தில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததி இன மக்கள் வசிக்கின்றனர்.இக்கிராம மக்கள் சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்து செல்ல பாதை வசதி இல்லை. இந்த கிராமம் தொப்பையாறு டேம், மேட்டூர் நீர்த்தேக்க பகுதி பொன்னி ஆற்றை ஒட்டி உள்ளது. ஆற்றை கடந்துதான் சுடுகாடு உள் ளது. இதனால் முறையான சுடு காடு பாதை இல்லாததால் இறந் தவர்களின் உடலை எடுத்து சென்று  அடக்கம் செய்வதில் சிரமம் ஏற் படுகிறது . குறிப்பாக, மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது.இது போன்ற நேரங்களில் சடலங் களை அடக்கம் செய்ய சடலத் தோடு ஆற்றை கடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இது சம்மந்தமாக ஆட்சியர் அலு லகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் முறையான சுடுகாடு பாதை வசதி யும், ஆற்றை கடக்கும் பகுதியில் மேம்பாலமும் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என  கிராம மக்கள் வலியுறுத்தி உள் ளனர்.

;